விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x

திருக்காட்டுப்பள்ளி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி:

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள முல்லைக்குடி மேலகுடியான தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது44). விவசாயி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வயிற்று வலி அதிகமானதால் முருகானந்தனம் பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து விட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பூதலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக அவரை தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகானந்தம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story