விஷம் குடித்து விவசாயி தற்கொலை
சின்னசேலம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே வீரபயங்கரம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 60) விவசாயி. இவருக்கு அடிக்கடி உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் உடல் நிலை சரியாகவில்லை. இதில் மனமுடைந்த அவர் விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பூபதி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாாின் பேரில் கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story