விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x

ஆளூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை,

ஆளூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

விவசாயி தற்கொலை

ஆளூர் அருகே உள்ள அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் குமரேசன் (வயது49), விவசாயி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாகவும், இதனால் குடும்பத்தை சரியாக கவனிக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சம்பவத்தன்று காலையில் குமரேசன் வாழை மரத்துக்கு பயன்படுத்தும் மருந்தை மதுவுடன் கலந்து குடித்து விட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் குமரேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குமரேசன் மனைவி ஏஞ்சல் இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story