வயலில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை


வயலில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 14 Dec 2022 6:45 PM GMT (Updated: 15 Dec 2022 11:34 AM GMT)

சிவகிரியில், கடன் தொல்லையால் வயலில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

சிவகிரி:

சிவகிரியில், கடன் தொல்லையால் வயலில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

விவசாயி

தென்காசி மாவட்டம் சிவகிரி மண்டபம் தெருவை சேர்ந்த நாராயணன் மகன் ஜெயச்சந்திரன் (வயது 35). விவசாயி. இவருடைய தந்தை கடந்த ஆண்டு நோயால் இறந்ததால் ஒரு வருட காலமாக தகப்பனார் செய்து வந்த விவசாய தொழிலை செய்து வந்தார். இவருக்கு விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் தொல்லையால் மன உளைச்சலில் அவதிப்பட்டு வந்தார்.

இந்தநிலையில் சிவகிரிக்கு மேற்கே சின்ன ஆவுடைப்பேரி கண்மாய் வயல் பகுதியில் உள்ள இவரது சொந்த வயலுக்கு சென்றார். வயலில் கரும்புக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை தின்று மயங்கிய நிலையில் கிடந்தார்.

சாவு

இதை அறிந்த அவருடைய மனைவி சங்கரேஸ்வரி அக்கம் பக்கத்தினரை அழைத்து வந்து அவரை சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜெயச்சந்திரன் பரிதாபமாக இறந்து விட்டார்.

தகவல் அறிந்ததும் சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சீவ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயசந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

இதுபற்றி சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சோகம்

இறந்து போன ஜெயச்சந்திரனுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

கடன் தொல்லையால் வயலில் விஷம்குடித்து விவசாயி தற்கொலை செய்து சோக முடிவை தேடிக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.Next Story