உழவர் கடன் அட்டை வழங்கும் முகாம்
ராணிப்பேட்டையில் உழவர் கடன் அட்டை வழங்கும் முகாம் 2 நாட்கள் நடக்கிறது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பி.எம்.கிசான் திட்டத்தில் உழவர் கடன் அட்டை வழங்கும் முகாம் இன்று (சனிக்கிழமை), 26-ந் தேதி (புதன்கிழமை), 2-ந் தேதி (புதன்கிழமை) ஆகிய நாட்களில் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. முகாமில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை வணிகம், தேசிய வங்கிகளின் அலுவலர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க உள்ளார்கள். இதனை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது வங்கி கணக்கு நகல், ஆதார் நகல், சிட்டா மற்றும் பான் அட்டை நகல் கொண்டு வந்து உழவர் கடன் அட்டை பெற்று பயன் பெறலாம்.
இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story