பாம்பு கடித்து விவசாயி சாவு


பாம்பு கடித்து விவசாயி சாவு
x

பாலக்கோட்டில் பாம்பு கடித்து விவசாயி இறந்தார்.

தர்மபுரி

பாலக்கோடு

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பொன்னன் தெருவை சேர்ந்தவர் பழனி (வயது55), விவசாயி. இவருக்கு மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர் கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி வீட்டிற்கு அருகே இருந்த பச்சியம்மன் கோவில் அருகே சென்றார். அப்போது பாம்பு ஒன்று அவரை கடித்தது. உடனடியாக சிகிச்சைக்காக அவரை பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தொடர்ந்து கடந்த 23-ந் தேதி மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனி இறந்தார். இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story