பஸ் மோதி விவசாயி சாவு


பஸ் மோதி விவசாயி சாவு
x
தினத்தந்தி 18 July 2023 1:00 AM IST (Updated: 18 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

பஸ் மோதி விவசாயி இறந்தார்.

நாகப்பட்டினம்

வாய்மேடு அருகே பஸ் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

விவசாயி

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வேளுக்குடி பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன் (வயது41). விவசாயி. இவர் நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள கருப்பம்புலத்தில் மனைவி வீட்டில் தங்கி உள்ளார். நேற்று காலை நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள பன்னாள் ரோடு பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த தனியார் கல்லூரி பஸ்சும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்ெகாண்டன.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சுரேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதை அறிந்த வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இறந்த சுரேந்திரனுக்கு கவிதா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இது குறித்த புகாரின்பேரில் வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story