வாகனம் மோதி விவசாயி சாவு
ராஜபாளையம் அருகே வாகனம் மோதி விவசாயி இறந்தார்.
விருதுநகர்
ராஜபாளையம்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆவாரம்பட்டி பாரதியார் தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 38).விவசாயி. இவர் நேற்று முன்தினம் மதுரை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அடையாளம் தெரியாத கார், இவர் மீது மோதி விட்டு சென்று விட்டது. இதில் காயமடைந்த இவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story