விலங்குகளுக்கு வைத்த மின் வேலியில் சிக்கி விவசாயி சாவு


விலங்குகளுக்கு வைத்த மின் வேலியில் சிக்கி விவசாயி சாவு
x

விலங்குகளுக்கு வைத்த மின் வேலியில் சிக்கி விவசாயி பலியானார்.

ராணிப்பேட்டை

சோளிங்கரை அடுத்த வெங்குப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமார், விவசாயி. இவர் அங்குள்ள விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில், வெங்கு பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் விவசாய நிலத்தில் பன்றிக்காக அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி குமார் உயிரிழந்தது தெரிய வந்தது.

அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story