மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி
மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி உயிரிழந்தார்.
திருச்சி
தா.பேட்டை:
துறையூர் தாலுகா, காளியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 50). விவசாயி. இவரது வீட்டில் நடைபெற்ற சுபநிகழ்ச்சிகாக முசிறிக்கு மோட்டார் சைக்கிள் சென்று வாழையிலை வாங்கிக்கொண்டு, பின்னர் மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். முசிறி - துறையூர் சாலையில் ஜெம்புநாதபுரம் அருகே வந்தபோது சாலையோர புளியமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த விஜயகுமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜெம்புநாதபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தண்டபாணி மற்றும் போலீசார், விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story