பாம்பு கடித்து விவசாயி சாவு


பாம்பு கடித்து விவசாயி சாவு
x

பாம்பு கடித்து விவசாயி இறந்தார்.

அரியலூர்

ஆண்டிமடம்:

ஆண்டிமடம் அருகே உள்ள பட்டணங்குறிச்சி வில்வாநத்தம் மெயின் ரோடு தெருவை சேர்ந்தவர் அந்தோணிசாமி(வயது 69). விவசாயி. இவருக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இந்நிலையில் இவர் தனது கடலை வயலில் கடலை செடிகளை பறித்து கொண்டிருந்தபோது, அவரை பாம்பு கடித்துள்ளது. இதில் மயங்கிய அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு வருவதில் ஏற்பட்ட காலதாமதத்தால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஆண்டிமடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இது பற்றி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இப்பகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. ஆண்டிமடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் விஷக்கடிக்கு மருந்து போன்ற போதிய வசதி இல்லாத காரணத்தால், பாதிக்கப்பட்டவர்களை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதனால் உயிரிழப்பு ஏற்படும் நிலையும் உள்ளது. எனவே ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி, அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தந்தால் மட்டுமே உயிரிழப்பை தவிர்க்க முடியும். இதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும், என்று தெரிவித்தனர்.


Next Story