சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயிக்கு 20 ஆண்டு சிறை


சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயிக்கு 20 ஆண்டு சிறை
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

திருநெல்வேலி

தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா கோடங்கிபட்டி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னசாமி மகன் செல்லத்துரை (வயது 36). விவசாயி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், வாசுதேவநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து செல்லத்துரையையும், அவருக்கு உதவியாக இருந்ததாக அதே பகுதியை சேர்ந்த மங்கேஸ்வரன் மகன் மாரிசெல்வம் (23) என்பவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நெல்லையில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு நீதிபதி அன்புச்செல்வி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட செல்லத்துரைக்கு அவதூறாக பேசியதற்கு 6 மாதம் சிறையும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 1 ஆண்டு சிறையும், பாலியல் குற்றத்துக்காக 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்குமாறும் உத்தரவிட்டார்.

மேலும் மாரிசெல்வத்துக்கு அவதூறாக பேசியதற்கு 6 மாதம் சிறை தண்டனையும், மிரட்டல் விடுத்ததற்கு 1 ஆண்டு சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.


Next Story