தாயை கத்தியால் குத்திய விவசாயி சிறையில் அடைப்பு


தாயை கத்தியால் குத்திய விவசாயி சிறையில் அடைப்பு
x

செந்துறை அருகே தாயை கத்தியால் குத்திய விவசாயியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அரியலூர்

தகராறு

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆதிகுடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் செல்லம் (வயது 48). இவரது கணவர் செல்வராஜ் கேரளாவில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு செல்வகுமார் (29) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

விவசாயியான செல்வகுமார் தனது தாயாரிடம் மகள்களுக்கு மட்டுமே அனைத்தையும் செய்கிறீர்கள் எனக்கு எதுவும் செய்யவில்லை என்று அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

சிறையில் அடைப்பு

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு வந்த செல்வகுமார் பீரோவில் வைத்திருந்த பாஸ்போர்ட் மற்றும் சான்றிதழ்களை தேடி உள்ளார். ஆனால் எதுவும் கிடைக்காததால் ஆத்திரமடைந்த செல்வகுமார் தான் வைத்திருந்த கத்தியால் தாயார் செல்லத்தை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் அவருக்கு தோள்பட்டை பகுதியில் காயங்கள் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து செல்வகுமார் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். காயம் அடைந்த செல்லத்தை அப்பகுதி மக்கள் மீட்டு செந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story