லாரி மோதி விவசாயி பலி; லிப்ட் கேட்டு சென்ற பெண் படுகாயம்


லாரி மோதி விவசாயி பலி; லிப்ட் கேட்டு சென்ற பெண் படுகாயம்
x

லாரி மோதி விவசாயி பலியானார். லிப்ட் கேட்டு சென்ற பெண் படுகாயம் அடைந்தார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே விளாங்குடி சுத்தமல்லி சாலையில் நரியங்குழி பஸ் நிலையம் அருகே காரைக்காலில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று அரியலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது வி.கைகாட்டியிலிருந்து சுத்தமல்லி நோக்கி சென்றபோது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற சுத்தமல்லி ஆண்டரசன் தெருவை சேர்ந்த விவசாயியான ராஜா(வயது 52) படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் சென்ற உடையவர் தீயனூர் கிராமத்தைச் சேர்ந்த கலையரசன் மனைவி தமிழரசி(20) என்பவர் படுகாயத்துடன் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான கடலூர் மாவட்டம், புவனகிரி பகுதியைச் சேர்ந்த முருகேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதில் ராஜாவிடம் லிப்ட் கேட்டு தமிழரசி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story