கார் மோதி விவசாயி பலி
வைகுந்தத்தில் கார் மோதி விவசாயி பலியானார்.
சேலம்
சங்ககிரி:-
எடப்பாடி அருகே உள்ள கோனேரிப்பட்டி வடக்கு காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 70). விவசாயி இவர் நேற்று முன்தினம் இரவு சங்ககிரி அருகே வைகுந்தத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த உறவினரது திருமண வரவேற்பு விழாவுக்கு வந்தார். வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே அவர் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு அவர் பலத்த காயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் சுப்பிரமணியை மீட்டு சிகிச்சைக்காக சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீசார் கார் டிரைவரான ஆட்டையாம்பட்டி அருகே உள்ள பல்லக்குளியை சேர்ந்த செல்வம் (60) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story