சாமிசெட்டிப்பட்டி ஊராட்சியில் சாலை அமைக்கும் பணியை தடுத்து விவசாயி தர்ணா


சாமிசெட்டிப்பட்டி ஊராட்சியில் சாலை அமைக்கும் பணியை தடுத்து விவசாயி தர்ணா
x
தினத்தந்தி 16 Jun 2023 12:30 AM IST (Updated: 16 Jun 2023 6:35 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே சாமிசெட்டிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கமலநத்தம் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு இடையே அப்பகுதியை சேர்ந்த சிலர் போலீசார் முன்னிலையில் பொக்லைன் எந்திரத்தை கொண்டு சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே ஊரை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது பட்டா நிலத்தில் சாலை அமைக்க கூடாது என்றும், வட்டார வளர்ச்சி அலுவலரின் பரிந்துரையின் பேரில் அளந்து சாலை அமைக்க வேண்டும் என தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்து சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயி சம்பந்தப்பட்ட பொக்லைன் எந்திரம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தொப்பூர் போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் வட்டார வளர்ச்சி அலுவலர் பரிந்துரையின் பேரில் அளந்து சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தற்போது சாலை அமைக்கும் பணியை நிறுத்துகிறோம் என தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த விவசாயி அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story