கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை


கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை
x

களம்பூர் அருகே விவசாயி கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஆரணி கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை

ஆரணி

களம்பூர் அருகே விவசாயி கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஆரணி கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

விவசாயி கொலை

களம்பூரை அடுத்த சதுப்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 36), விவசாயி. அதே கிராமத்தை சேர்ந்தவர் திருஞானம், விவசாயி. இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் முன்விரோதம் காரணமாக கடந்த 14.12.2020 அன்று சுரேசை திருஞானம் கையாளும் காலாலும் சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சையாக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சுரேசின் சகோதரர் ஏழுமலை களம்பூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருஞானத்தை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு ஆரணி ஒருங்கிணைந்த கோர்ட்டில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த நிலையில் இன்று விசாரணை முடிந்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி கே.விஜயா தீர்ப்பு வழங்கினார்.

அதில் திருஞானத்திற்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து திருஞானத்தை களம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story