விஷம் குடித்து விவசாயி தற்கொலை
பட்டுக்கோட்டை அருகே 3 குழந்தைகளும் பெண்ணாக பிறந்ததால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
பட்டுக்கோட்டை;
பட்டுக்கோட்டை அருகே 3 குழந்தைகளும் பெண்ணாக பிறந்ததால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
3 பெண் குழந்தைகள்
பட்டுக்கோட்டையை அடுத்த ஆலத்தூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் விஜயேந்திரன்(வயது47). விவசாயி. இவருக்கும் ராஜகுமாரி என்பவருக்கும் திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கடைசி பெண் குழந்தைக்கு 2 வயது ஆகிறது. கடந்த சில மாதங்களாக விஜயேந்திரன் தனக்கு 3 பெண் குழந்தைகளாக பிறந்ததால் மன ேவதனையில் புலம்பி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் விஜயேந்திரன் அதே பகுதியில் உள்ள தென்னந் தோப்புக்கு சென்று தென்னை மரத்துக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்தார்.
பரிதாப சாவு
இதனால் மயங்கி கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு, பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் விஜயேந்திரன் வரும் வழியில் இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து அவருடைய மனைவி ராஜகுமாரி பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 3-வதும் பெண் குழந்தை பிறந்ததால் மனமுடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆலத்தூர் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.பட்டுக்கோட்டை அருகே 3 குழந்தைகளும் பெண்ணாக பிறந்ததால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.