விவசாயி தற்கொலை


விவசாயி தற்கொலை
x

ராஜபாளையம் அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே சோலைச்சேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் மாடசாமி (வயது 60). விவசாயி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனை அவரது மனைவி சந்தனமாரி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த மாடசாமி அரளி விதையை அரைத்து குடித்தார். இதில் மயங்கி கீழே விழுந்த அவரை உடனே மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சந்தனமாரி அளித்த புகாரின் பேரில் சேத்தூர் புறநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகாந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story