திருக்கோவிலூர் அருகேவிவசாயி தற்கொலை


திருக்கோவிலூர் அருகேவிவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 21 May 2023 12:15 AM IST (Updated: 21 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.

கள்ளக்குறிச்சி


திருக்கோவிலூர்,

அரகண்டநல்லூர் அருகே உள்ள மனம்பூண்டியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 55). விவசாயி. இவரது மனைவி அனுராதா(54). திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர். இதில் ஒருவருக்கு திருமணமாகிவிட்டது.

முருகன் வேலைக்கு எதுவும் போகாமல் இருந்துள்ளார். இதை அனுராதா தட்டிக் கேட்டுள்ளார். இதனால் மனமுடைந்த முருகன், சம்பவத்தன்று தனது வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் கேபிள் டி.வி. ஒயரில் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அழைத்து செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story