பரமத்திவேலூர் சந்தையில்வாழைத்தார் விலை உயர்வுவிவசாயிகள் மகிழ்ச்சி


பரமத்திவேலூர் சந்தையில்வாழைத்தார் விலை உயர்வுவிவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 29 July 2023 12:30 AM IST (Updated: 29 July 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் சந்தையில் வாழைத்தார்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வாழைத்தார்கள்

பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளனர்.

இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. சிறு விவசாயிகள் பரமத்திவேலூரில் உள்ள விற்பனை சந்தைக்கு வாழைத்தார்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

இந்த நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.450-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.250-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5-க்கு விற்பனை ஆனது.

இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.7-க்கு விற்பனையானது.

கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் பூவன் வாழைத்தாரை விட மற்ற வகை வாழைத்தார்களின் விலை உயர்ந்துள்ளதால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1 More update

Next Story