விவசாயிகள் உழவன் செயலி மூலம்மரக்கன்றுகள் பெறலாம் வேளாண் அதிகாரி தகவல்
தர்மபுரி
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முனி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ் தேக்கு, மலைவேம்பு மற்றும் பூவரசு உள்ளிட்ட மரக்கன்றுகள் பி.பள்ளிப்பட்டியில் வனத்துறை நாற்றங்கால் பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்டு வனத்துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் தகவல்களுக்கு அ.பள்ளிப்பட்டியில் செயல்படும் வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு பயனடையலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story