பஞ்சப்பள்ளி பகுதியில்பஜ்ஜி மிளகாய் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்


பஞ்சப்பள்ளி பகுதியில்பஜ்ஜி மிளகாய் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
x
தினத்தந்தி 13 Oct 2023 12:30 AM IST (Updated: 13 Oct 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

பஞ்சப்பள்ளி பகுதியில் பஜ்ஜி மிளகாய் சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தர்மபுரி

பாலக்கோடு:

பஞ்சப்பள்ளி பகுதியில் பஜ்ஜி மிளகாய் சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பஜ்ஜி மிளகாய்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் கரும்பு, தக்காளி, நெல் மற்றும் பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது விவசாயிகள் மாற்று பயிர் சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அதன்படி பஞ்சப்பள்ளி கிராமத்தில் குளிர்பிரதேசங்களில் வளரும் பஜ்ஜி மிளகாயை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இந்த பஜ்ஜி மிளகாய் நடவு செய்த 60-வது நாளில் இருந்து 10 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் அறுவடை செய்யலாம்.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ஒரு ஏக்கருக்கு 40 டன் வரை பஜ்ஜி மிளகாய் விளைச்சல் கிடைக்கும். இதற்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. ஒரு ஏக்கர் மிளகாய் சாகுபடி செய்ய ரூ.3 லட்சம் வரை செலவாகிறது என்றனர்.

வியாபாரிகள் கிலோ 20 ரூபாய்க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்து மார்க்கெட்டில் கிலோ 35 ரூபாய் என விற்பனை செய்கின்றனர். பஜ்ஜி மிளகாய் விவசாயத்தில் நல்ல லாபம் கிடைப்பதால் அதனை சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story