விவசாயிகள் ஆலோசனை குழுக்கூட்டம்


விவசாயிகள் ஆலோசனை குழுக்கூட்டம்
x

விவசாயிகள் ஆலோசனை குழுக்கூட்டம் நடைபெற்றது.

கரூர்

கிருஷ்ணராயபுரம் வட்டார வேளாண்மைத்துறையின் கீழ் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தில் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழுக்கூட்டம் மாயனூரில் நடைபெற்றது. இதற்கு வேளாண்மை உதவி இயக்குனர் அரவிந்தன் தலைமை தாங்கினார். மாயனூர் கால்நடை உதவி மருத்துவர் ஜெகதீசன் கால்நடை துறையில் செயல்படும் திட்டங்கள் மற்றும் மானிய விபரங்கள் பற்றியும் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களை கண்டறிந்து கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி எடுத்து கூறினார்.

கரூர் வனத்துறை வனவர் அருணாதேவி மரக்கன்றுகள் பற்றியும் மரக்கன்றுகள் பெற தேவையான ஆவணங்கள் பற்றி கூறினார். தொடர்ந்து கரூர் பட்டுவளர்ச்சித் துறை பொன்னுசாமி பட்டுப்புழு வளர்ப்பின் முக்கியத்துவம் மானிய விபரங்கள் பற்றி விவசாயிகளுக்கு கூறினார். உதவி வேளாண்மை அலுவர் ரமேஷ் வேளாண் வணிகம் வேளாண் விற்பனைத் துறையில் தற்போது உள்ள வணிக கடன் பற்றியும் அவற்றை பெற தேவையான ஆவணங்கள் பற்றி பேசினார். கிருஷ்ணராயபுரம் தோட்டக்கலை அலுவலர் மணிகண்டன் மானிய திட்டங்கள், தோட்டக்கலை இடு பொருட்கள் மானிய திட்டத்தில் பயன் பெற தேவையான ஆவணங்கள் பற்றி கூறினார்.வேளாண்மை அலுவலர் ஸ்ரீபிரியா மண்பரிசோதனையின் முக்கியத்துவம் மண் மாதிரிகள் சேகரிக்கும் முறைகள்,மண் வள அட்டையின் குறிப்புகள் பற்றி கூறினார். தொடர்ந்து விவசாயிகளுக்கு கால்நடைத்துறை சார்பில் நாட்டுக்கோழி வளர்ப்பு கையேடு வழங்கப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குனர் அரவிந்தன் வேளாண்மைத்துறையின் இடு பொருட்களின் பற்றியும், உயிர் உரங்களின் பயன்கள் பற்றியும் உழவன் செயலியின் பயன்பாடுகள் குறித்தும் இயற்றை வேளாண் முறைகள் பற்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ் செய்திருந்தார்.


Next Story