விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம்


விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம்
x

விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.

கரூர்

தோகைமலை வட்டார வேளாண்மைத்துறை சார்பாக விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு வேளாண்மை உதவி இயக்குனர் மதன்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வனத்துறை சார்பாக விவசாயிகள் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பது எப்படி, தமிழ்நாடு அரசு சார்பாக இலவசமாக வழங்கப்படும் மரக்கன்றுகள், இலவச மரக்கன்றுகளை பெறுவது எப்படி இதற்கான ஆவணங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை மூலம் சிறுதானிய பொருள் மதிப்பு கூட்டுதல், வணிக கடனை விவசாயிகள் பயன்பெறுவதற்கான ஆவணங்கள் குறித்து எடுத்துரைத்தனர். மேலும் தோட்டக்கலைத்துறை சார்பாக இடுபொருட்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், வனத்துறை வனகர் பழனிச்சாமி, வேளாண் வணிகம் விற்பனைத்துறை உதவி வேளாண்மை அலுவலர் வெங்கடேசன், உதவி தோட்டக்கலை அலுவலர் லெனின் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story