விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம்
கீழ்பென்னாத்தூரில் விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடந்தது.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் வட்டார தொழில்நுட்ப குழு அமைப்பாளர்கள் மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடந்தது.
அட்மா ஆலோசனைக்குழு தலைவர் சோமாசிபாடி ஆர்.சிவக்குமார் தலைமை தாங்கினார். வட்டார வேளாண் உதவி இயக்குனர் சந்திரன், குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வேளாண், தோட்டக்கலை, வேளாண் வணிகம் ஆகிய துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு அந்தந்த துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கி கூறினர்.
அப்போது நடப்பாண்டில் அட்மா திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் இனங்களுக்கான நிதிஒதுக்கீடும், செயல் திட்டம் குறித்து விளக்கி கூறினர்.
மேலும் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு வேளாண் அலுவலர் பிரியங்கா விளக்கி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சங்கீதா, மீனா, ஹரிகரன் ஆகியோர் செய்திருந்தனர்.
முடிவில் சோமாசிபாடி உதவி வேளாண் அலுவலர் விக்னேஸ்வரன் நன்றி கூறினார்.