பருத்திக்கு உரிய விலை நிர்ணயிக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


பருத்திக்கு உரிய விலை நிர்ணயிக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Jun 2023 12:43 AM IST (Updated: 28 Jun 2023 4:29 PM IST)
t-max-icont-min-icon

பருத்திக்கு உரிய விலை நிர்ணயிக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர்

கடந்த 2022-23-ம் ஆண்டுக்கான சம்பா, தாளடி, ரபி பருவத்தில் மகசூல் பாதித்த பகுதிகளில் பயிர்க்காப்பீடு தொகையை உரிய இழப்பீடுடன் வழங்க வேண்டும். பருத்திக்கு உரிய நியாயமான விலை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன் கலந்து கொண்டு பேசினார். பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story