விவசாயிகள் வேளாண் சுற்றுலா
ராதாபுரம் வட்டார விவசாயிகள் வேளாண் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
திருநெல்வேலி
ராதாபுரம்:
தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் சங்கமம் - 2023 என்ற மாநில கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. இதில் வேளாண் விளை பொருட்கள், நவீன வேளாண் கருவிகள், புதிய ரக விதைகள், பாரம்பரிய விதைகள், பண்டைய கால வேளாண் கருவிகள், மாடித்தோட்டம் அமைத்தல் தொடர்பாக 284 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் கண்காட்சியில் வேளாண்மையில் எந்திர மயமாக்குதல், பன் முக உணவாக பயன்படும் முருங்கை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டுதல் தொழில் நுட்பம் உள்ளிட்ட கருந்தரங்கு தலைப்புகளில் வேளாண் வல்லுநர்கள் பேசினர். வேளாண்மை உதவி இயக்குனர் ஜாஸ்மின் லதா அறிவுறுத்தலின் படி ராதாபுரம் பகுதியை சேர்ந்த விவசாயிகளை வேளாண் சுற்றுலாவாக உதவி தொழில் நுட்ப மேலாளர் சரிகா மற்றும் சுபா ஆகியோர் அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story