தியாகதுருகம் அருகே நாகலூர் பெரிய ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி


தியாகதுருகம் அருகே நாகலூர் பெரிய ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
x

தியாகதுருகம் அருகே நாகலூர் பெரிய ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் அருகே நாகலூர் ஊராட்சியில் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான ஏரி சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு கோமுகி ஆற்றில் இருந்து வெளியேறும் தண்ணீர் விருகாவூர் அணை வழியாக வந்தடைகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகவும், கோமுகி ஆற்றில் இருந்து நீர் வரத்து இருந்ததாலும், நாகலூர் பெரிய ஏரி நிரம்பியது. மேலும் ஏரி நிரம்பி, அதன் கோடி பகுதி வழியாக உபரி நீர் வெளியேறுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழையின்போது தான், நாகலூர் பெரிய ஏரி நிரம்புவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு முன்னதாகவே நிரம்பியது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள், சம்பா பயிர் சாகுபடியில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.


Next Story