சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 110 அடியை எட்டியது விவசாயிகள் மகிழ்ச்சி


சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 110 அடியை எட்டியது விவசாயிகள் மகிழ்ச்சி
x

சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் 110 அடியை எட்டியுள்ளது‌.

திருவண்ணாமலை

தண்டராம்பட்டு

சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் 110 அடியை எட்டியுள்ளது‌.

சாத்தனூர் அணை

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகிலுள்ள சாத்தனூர் அணை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய அணைகளில் ஒன்றான இந்த அணையின் மூலம் 90-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய ஏரிகளும் நீர் ஆதாரம் கிடைப்பதோடு திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெற்று வருகின்றன. மேலும் திருவண்ணாமலை, தானிப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதி்களுக்கு சாத்தனூர் அணையின் மூலம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

110 அடி எட்டியது

சாத்தனூர் அணையின் உயரம் 119 அடியாகும். இதில் 7321 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். தற்போது கிருஷ்ணகிரி அணை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதாலும் சாத்தனூர் அணையை சுற்றி உள்ள கல்வராயன் மலை பகுதியில் தொடர் மழை பெய்து வருவதாலும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 660 கன அடி நீர் வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 109.70 அடி தாண்டி இரவு 110 அடியை எட்டியது. அதாவது 5378 மில்லியன் கன அடி நீர் தற்போது அணையில் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 73.50 சதவீதமாகும்அணை வேகமாக நிரம்பி வருவதால் முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சாத்தனூர் அணையை நம்பி உள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story