வெண்டை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்


வெண்டை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
x

வாணாபுரம் பகுதிகளில் வெண்டை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.

திருவண்ணாமலை

வாணாபுரம்

வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் மிக முக்கிய பங்கு வகித்தது இப்பகுதி விவசாயிகள் நெல், கரும்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து உள்ளிட்ட பயிர்களை அதிகளவில் பயிரிடப்பட்டு பராமரித்து வருகின்றனர்.

மேலும் பருவ கால பயிராக பூக்கள் வகையான பயிர்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவைகளையும் பயிரிடுகின்றனர். தற்போது வெண்டை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.

அதன்படி வாணாபுரம், மழுவம்பட்டு, நவம்பட்டு, மெய்யூர், காம்பட்டு, கூடலூர், சின்னகல்லப்பாடி, பெரியகல்லப்பாடி, நரியாபட்டு உள்ள பகுதிகளில் கடந்த மாதம் பயிரிடப்பட்ட வெண்டை தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் வெண்டையின் விலை கிலோ ரூ.10 முதல் ரூ.15-க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் இப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் மொத்தமாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் அதனை கிலோ ரூ.30 முதல் ரூ.60 வரை விற்பனை செய்கின்றனர்.

இதனால் செலவு செய்த தொகையை கூட பெற முடியவில்லை என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வியாபாரிகள் வாங்கும் தொகையை காட்டிலும் கூடுதலாக ரூ.10 முதல் ரூ.15 ரூபாய் அரசு நேரடியாக காய்கறிகளை எங்களிடம் கொள்முதல் செய்தால் செலவு செய்த தொகையாவது நாங்கள் பெற முடியும் என்றனர்.


Next Story