அல்வா கொடுத்து விவசாயிகள் நூதன போராட்டம்


அல்வா கொடுத்து விவசாயிகள் நூதன போராட்டம்
x

நாகை அருகே பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து அல்வா கொடுத்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகை அருகே பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து அல்வா கொடுத்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பயிர்காப்பீட்டு தொகை

நாகை மாவட்டத்தில் கடந்த 2021-2022-ம் ஆண்டு நெற்பயிர்களுக்கு விவசாயிகள் என்ற தனியார் காப்பிட்டு நிறுவனத்தில் காப்பீடு செய்திருந்தனர்.

காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இதுவரை காப்பீட்டு தொகை வழங்கவில்லை. இதை தொடர்ந்து பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அல்வா கொடுத்து நூதன போராட்டம்

இநத நிலையில் நாகை ஒன்றியம் பாலையூர் கிராமத்தில் நடவு பறிக்கும் பணியில் ஈடுபட்ட விவசாயிகள் ஒருவருக்கு ஒருவர் அல்வா கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காப்பீட்டுத் தொகை வழங்காமல் காப்பீட்டு நிறுவனம் தங்களுக்கு அல்வா கொடுப்பதாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.மேலும் நாகை மாவட்டத்தில் உள்ள 236 வருவாய் கிராமங்களில் இதுவரை 28 கிராமங்களுக்கு மட்டுமே பயிர் காப்பீட்டு தொகை வழங்கி உள்ளதை கண்டித்தும், பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story