வாயில் துணியை கட்டி விவசாயிகள் போராட்டம்


வாயில் துணியை கட்டி விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 23 July 2023 7:15 AM IST (Updated: 23 July 2023 7:15 AM IST)
t-max-icont-min-icon

சுல்தான்பேட்டை அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் துணியை கட்டி விவசாயிகள் போராட்டம் செய்தனர்.

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை, ஜூலை.23-

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், கொப்பரை தேங்காயை கிலோ ரூ.140-க்கு கொள்முதல் செய்ய வேண்டும். உரித்த தேங்காய் கிலோ ரூ.50-க்கு கொள்முதல் செய்ய வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற கோரி சுல்தான்பேட்டை ஒன்றியம் பச்சார்பாளையத்தில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

18-வது நாளான நேற்று விவசாயிகள் தலையில் தேங்காயை சுமந்தும், பச்சை துண்டால் வாயை கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், நிர்வாகிகள் மந்திரகிரி மாசிலாமணி, தேவராஜ், கார்த்தி, பரமேஷ்வரன் உள்பட பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.


Related Tags :
Next Story