வேளாண்மைக்கு கூடுதல் நிதி ஒதுக்கக்கோரி விவசாயிகள் நூதன போராட்டம்


வேளாண்மைக்கு கூடுதல் நிதி ஒதுக்கக்கோரி விவசாயிகள் நூதன போராட்டம்
x

தமிழக பட்ஜெட்டில் வேளாண்மைக்கு கூடுதல் நிதி ஒதுக்கக்கோரி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு உழவர் பேரவை விவசாயிகள் சங்கத்தினர் இன்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் பெரியது, சிறியது என்று 3 பானைகளை ஒன்றின் மேல் ஒன்றை அடுக்கி அதில் பால் ஊற்றி பொங்கல் வைப்பது போன்று செய்தனர். தொடர்ந்து அவர்கள் அந்த பானையை தரையில் போட்டு உடைத்தனர்.

பின்னர் அவர்கள் தமிழக பட்ஜெட்டில் வேளாண்மை துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

இந்த போராட்டத்திற்கு வாக்கடை புருசோத்தமன் தலைமை தாங்கி கூறுகையில், கேரளா மற்றும் தெலுங்கானாவில் வேளாண்மை துறைக்கு முக்கியத்துவம் கொண்டு தேவையான அளவு நிதி ஒதுக்கப்படுகிறது.

ஆனால் தமிழகத்தில் சேவைத் துறைக்கும், தொழில் துறைக்கும் அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டு வேளாண்மைக்கு குறைத்து நிதி ஒதுக்கப்படுகிறது.

எனவே வரும் காலங்களில் பட்ஜெட்டில் வேளாண்மை துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.

இதில் நார்த்தாம்பூண்டி சிவா, வி.என்.அறுமுகம், பாண்டிதுரை, சற்குணம், துரைசாமி, பாலகிருஷ்ணன் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story