மணிலா பயிரிடுவதில் விவசாயிகள் தீவிரம்


மணிலா பயிரிடுவதில் விவசாயிகள் தீவிரம்
x

வாணாபுரம் பகுதிகளில் மணிலா பயிரிடுவதில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

திருவண்ணாமலை

வாணாபுரம் பகுதிகளில் மணிலா பயிரிடுவதில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

விவசாயம்

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. இப்பகுதிகளில் பெரும்பாலும் தென்பெண்ணை ஆற்று கரையோர பகுதிகளை காட்டிலும் மேடான பகுதிகளில் தண்ணீர் குறைந்த அளவே கிடைப்பதால் மழையை எதிர் நோக்கியே இப்பகுதி விவசாயிகள் பயிரிடப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் எதிர்வரும் காலங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதினால் பூக்கள் வகையான பயிர்களையும் பயிரிடப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓரளவுக்கு மழை பெய்தது. அதைத் தொடர்ந்து விவசாயிகள் விலை நிலத்தை உழுது பயிரிடுவதற்கு தயார் நிலையில் வைத்திருந்தனர். போதுமான ஈரப்பதம் இருப்பதை பயன்படுத்தி இப்பகுதி விவசாயிகள் உளுந்து, மணிலா, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிறு வகை பயிர்களையும், மேலும் மணிலா பயிரோடு சேர்த்து உளுந்து உள்ளிட்ட பயிர்களையும் விவசாயிகள் ஊடு பயிர்களாக பயிரிடப்பட்டு வருகின்றனர்.

அதிகளவில் மணிலா பயிர்

அந்த வகையில் வாணாபுரம், மழுவம்பட்டு, பறையம்பட்டு, அகரம் பள்ளிப்பட்டு, கொட்டையூர், வாழவச்சனூர், பெருந்துறைபட்டு, பேரயாம்பட்டு, அள்ளிக்கொண்டாபட்டு உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மணிலா விதைப்பதற்கு விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

பெரும்பாலும் மழையை எதிர்நோக்கி பயிரிடப்படக்கூடிய பயிர்களாக இப்பகுதி விளங்கி வருகிறது. மலை மற்றும் காப்புக்காடு பகுதிகளில் விவசாய நிலங்கள் இருப்பதால் அதிகளவில் கிணற்றை நம்பி பயிரிடக்கூடிய நிலை இல்லாமல் இருக்கிறது. எனவே இருக்கும் தண்ணீர் மற்றும் மழையை வைத்து இப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஹெக்டர் பரப்பளவில் மணிலா விதைக்கப்பட்டு வருகின்றோம்.

மேலும் ஆட்கள் பற்றாக்குறை அதிக அளவில் நிலவி வருவதால் வாகனங்களை கொண்டு மணிலா விதைக்க கூடிய சூழலும் நிலவி வருகிறது. ஆனால் ஊடுபயிராக உளுந்து, காராமணி உள்ளிட்ட பயிர்களை விதைப்பதற்கு எந்திரம் பயன்படுத்த முடியாது. அதற்காக மாடுகளை கொண்டு விதைக்கப்பட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story