அறுவடை செய்த நெல்லை கொட்டி வைத்து பல நாட்களாக காத்திருக்கும் விவசாயிகள்


அறுவடை செய்த நெல்லை கொட்டி வைத்து பல நாட்களாக காத்திருக்கும் விவசாயிகள்
x

அறுவடை செய்த நெல்லை கொட்டி வைத்து பல நாட்களாக காத்திருக்கும் விவசாயிகள்

தஞ்சாவூர்

மெலட்டூர்

பெருமாக்கநல்லூர் அரசு கொள்முதல் நிலையம் முன்பு அறுவடை செய்த நெல்லை கொட்டி வைத்து பல நாட்களாக விவசாயிகள் காத்திருக்கின்றனர். எனவே கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

காத்து கிடக்கும் விவசாயிகள்

பாபநாசம் தாலுகா பெருமாக்கநல்லூர், காவலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் குறுவை முன்பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது நெற்பயிர்கள் அறுவடை பருவத்தை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணியை தொடங்கி விட்டனர். ஆனால் பெருமாக்கநல்லூர் அரசு கொள்முதல் நிலையம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்காக அரசு கொள்முதல் நிலையம் முன்பு கொட்டி வைத்து கடந்த 10 நாட்களுக்கு மேலாக காத்து கிடக்கின்றனர்.

நெல்மணிகள் வீணாகும் அவலம்

சில விவசாயிகள் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் அறுவடை பருவம் தாண்டியும் நெற்பயிரை அறுவடை செய்யாமல் விட்டு வைத்துள்ளனர். மேலும் கடந்த ஒருவாரகாலமாக இந்த பகுதியில் மழை பெய்து வருவதால் கொள்முதல் நிலையம் முன்பு கொட்டி வைத்த நெல்மணிகள் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே உடனடியாக பெருமாக்கநல்லூர் அரசு கொள்முதல் நிலையத்தை திறந்து, நெல் கொள்முதல் செய்யும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story