வல்லத்தில்விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
வல்லத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
செஞ்சி,
தமிழக அரசு நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும், மணிலாவுக்கு குவிண்டாலுக்கு ரூ.12 ஆயிரம், கரும்பு டன் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி அடுத்த வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு மாநில கரும்பு விவசாய அணி செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி செயலாளர் ரமேஷ் வரவேற்றார். இதில் மயிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் , தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.
அப்போது, மாவட்ட தலைவர் ஆதி பகவன் மாவட்ட செயலாளர்கள் முருகன், கருணாகரன் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஏழுமலை வழக்கறிஞர்கள் ராஜாராம், பாஸ்கரய்யா மாவட்ட துணை செயலாளர் சுரேஷ் மற்றும் மரக்காணம், வல்லம், ஒலக்கூர், வானூர், மேல்மலையனூர், செஞ்சி ஒன்றியங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.