பயிர்கள் கருக தொடங்கியதால் விவசாயிகள் கவலை


பயிர்கள் கருக தொடங்கியதால் விவசாயிகள் கவலை
x

ஆலங்குளம் பகுதிகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருக தொடங்கின. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

விருதுநகர்

ஆலங்குளம்,

ஆலங்குளம் பகுதிகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருக தொடங்கின. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

தொடர்மழை

ஆலங்குளம் பகுதியில் உள்ள தொம்பகுளம், கொங்கன்குளம், கீழராஜகுலராமன். கரிசல்குளம், கண்மாய் பட்டி, வலையபட்டி, மேலாண்மறைநாடு, அருணாசலபுரம் அப்பயநாயக்கர்பட்டி, குறுஞ்செவல், கீழாண்மறைநாடு, ஏ.லட்சுமிபுரம், சுண்டங்குளம், கோபாலபுரம், புளியடிபட்டி, கல்லமநாயக்கர்பட்டி, மாதாங்கோவில்பட்டி, உப்பு பட்டி, காக்கிவாடன்பட்டி, எதிர்கோட்டை, எட்டக்காபட்டி, இ.டி.ரெட்டியபட்டி, குண்டாயிருப்பு, முத்துச்சாமிபுரம், கண்டியாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து மழை பெய்தது.

இதனால் விவசாயிகள் தங்களது நிலங்களில் 2 முறை உழவு செய்தனர்.

கருகிய பயிர்கள்

இதையடுத்து அடி உரமாக பொட்டாஷ், டி.ஏ.பி. ஆகிய உரங்களை பாத்திகட்டி, மக்காச்சோளம், பருத்தி ஆகிய விதைகளை ஊன்றி வைத்தனர். பயிரும் முளைத்துவிட்டது. இப்போது கிணற்று பாசனம் உள்ள பயிர்கள் வளர்ந்து வருகின்றது. தொடர்ந்து மழை இ்ல்லாததால் பயிர்கள் கருக தொடங்கி விட்டன.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

ஆலங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து மழை பெய்தது. இதனால் விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி பணிகளை தொடங்கினர். தற்போது மழை நின்று விட்டது.

விவசாயிகள் கவலை

முளைத்த பயிர்களுக்கு தேவையான அளவு தண்ணீர் கிணற்றில் இல்லை. இருப்பினும் ஒரு சில விவசாயிகள் கிணற்றில் இருக்கும் தண்ணீரை பயன்படுத்தி பயிரை காப்பாற்ற போராடி வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்யவில்லை என்றால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

ஆதலால் பாதிக்கப்பட்ட வயல்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து பயிர்களை காப்பாற்ற விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story