அதிகாரிகளுடன், விவசாயிகள் வாக்குவாதம்


அதிகாரிகளுடன், விவசாயிகள் வாக்குவாதம்
x

அதிகாரிகளுடன், விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு நேற்று ஏராளமான விவசாயிகள் பருத்தியை மறைமுக ஏலத்துக்காக கொண்டு வந்தனர். அவற்றை அடுக்கி வைப்பதற்கு அங்கு உள்ள குடோனில் இடமில்லாததால் திறந்தவெளியில் அடுக்கிவைத்தனர். நேற்று மதியம் மழைபெய்ய தொடங்கிய நிலையில் பருத்தி மூட்டைகள் மழையில் நனையாமல் இருப்பதற்காக தார்ப்பாய்கள் கொண்டு மூடிவைத்தனர். குடோன் இருந்தும் பருத்தி மூட்டைகளை அடுக்கி வைக்க இடமில்லை என்று அதிகாரிகள் கூறியதால் விவசாயிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து காவிரிடெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்க தலைவர் குரு.கோபிகணேசன் நிருபர்களிடம் கூறுகையில், மழையில் பருத்தி நனைந்து ஈரப்பதம் அதிகரித்தால் வியாபாரிகள் அடிமாட்டு விலைக்கு கேட்பார்கள். இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே பருத்தியை பாதுகாப்பாக குடோனில் அடுக்கி வைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

1 More update

Next Story