விவசாயிகள் சங்க மாநாடு


விவசாயிகள் சங்க மாநாடு
x

விவசாயிகள் சங்க மாநாடு நடைபெற்றது.

சிவகங்கை

இளையான்குடி

தமிழ்நாடு விவசாயிகள் சங்க 8-வது தாலுகா மாநாடு கீழாயூர் காலனி சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. தாலுகா தலைவர் சந்தியாகு தலைமை தாங்கினார். மூத்த நிர்வாகி பெரியதம்பி சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். இன்னாசி ராஜா வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ெதாடக்க உரையும், தாலுகா செயலாளர் ராஜு வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். பொருளாளர் சிவசாமி வரவு, செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். மாவட்ட தலைவர் ஜெயராமன், குழு உறுப்பினர் அழகர்சாமி, மாதர் சங்க தாலுகா செயலாளர் ஜெயந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில துணைத்தலைவர் முத்துராமு மாநாடு சிறப்புரை நிகழ்த்தினார். மாநாட்டில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்கவும், தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைக்க மத்திய- மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவும், பயிர் சேதங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் கோரிக்கை விடுத்தனர். தாலுகா செயலாளர் ராஜு நன்றி கூறினார்.


Related Tags :
Next Story