திருச்செந்தூரில் விவசாய சங்க கூட்டம்
திருச்செந்தூரில் விவசாய சங்க கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் தனியார் மண்டபத்தில் தாமிரபரணி தென்கால் ஆவுடையார்குளம் நீர் பாசன விவசாய சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு விவசாயிகள் சங்கத் தலைவர் சங்கரகுமார் தலைமை தாங்கினார். 1-வது மதகு உறுப்பினர் கருணாகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், ஆவுடையார் குளம் பாசனத்திற்கு உட்பட்ட மடைகளை சீரமைக்க வலியுறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், நிர்வாகிகள் சுப்பையா, ஆறுமுகம், முருகன், கணேசன், செல்வகணேசன், ராஜ்குமார், துரை, முத்து, வெண்ணிமாலை ராமசாமி உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story