ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்


ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்
x

திண்டிவனத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் செஞ்சி சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது. இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று காராமணி பயிருக்கு விலை பட்டியல் தகவல் பலகையில் ஒட்டப்படவில்லை. இதனால் காராமணி பயிருக்கான விலை குறித்த தகவல் பெற முடியாமல் விவசாயிகள் அவதி அடைந்தனர். இதில் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாகத்தை கண்டித்து திண்டிவனம் - செஞ்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை ரோஷணை போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார். இதையடுத்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விலைபட்டியல் ஒட்டப்பட்டது. இது குறித்து கண்காணிப்பாளர் ஆனந்தனிடம் கேட்டபோது,. காராமணி பயிர் அதிக அளவில் வரத்து வந்ததால், விலை பட்டியல் ஒட்ட காலதாமதம் ஆனது என்றார்.


Next Story