10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தேங்காய் உடைத்து போராட்டம்


10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தேங்காய் உடைத்து போராட்டம்
x
தினத்தந்தி 17 July 2023 12:15 AM IST (Updated: 17 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சுல்தான்பேட்டைஅருகே 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை,


சுல்தான்பேட்டைஅருகே 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

தமிழக அரசு, கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும். பாமாயிலுக்கு பதிலாக மானிய விலையில் தேங்காய் எண்ணெயை ரேஷன் கடையில் விற்பனை செய்ய வேண்டும். மத்திய அரசு, விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து உணவு பொருட்களுக்கும் உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

கொப்பரை கிலோ ரூ.140-க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கடந்த 5-ந்தேதி முதல் சுல்தான்பேட்டை ஒன்றியம் பச்சார்பாளையம் கிராமத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேங்காய் உடைத்து...

மேலும், தங்கள் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நேற்று விவசாயிகள் தேங்காய் உடைத்து போராட்டம் நடத்தினர். இதில், கோவிந்தனூர் நாகமாணிக்கம், கோவை மாவட்ட செயலாளர் வேலு, மந்திராசலம், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், பல்லடம் பாலு மணியகாரர் என்கிற பாலசுப்பிரமணியம், உடுமலை ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story