நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்


நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
x

நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தியாகதுருகம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் வட்டாரத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளான ஏரிகள் மற்றும் குளங்களில் இருந்து வண்டல் மண் எடுப்பதற்கு உரிய விண்ணப்பங்கள் விவசாயிகளிடம் இருந்து வரவேற்க்கப்படுகிறன.

அதன்படி வண்டல் மண் எடுக்க விண்ணப்பிக்கும் விவசாயிகள் விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல், சிட்டா மற்றும் கடைசியாக சாகுபடி செய்த பயிரின் அடங்கல் ஆகியவற்றை இணைத்து அந்தந்த பகுதியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலரிடம் நேரடியாக அளிக்க வேண்டும். அல்லது கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலத்தில் அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் வருவாய்த்துறை மூலம் பரிசீலிக்கப்பட்டு வண்டல் மண் எடுக்க உரிய அனுமதி வழங்கப்படும்.

பயிர் வளர்ச்சிக்கு உறுதுணை

வண்டல் மண் எனப்படுவது மணல் மற்றும் களிமண் சேர்ந்த கலவையாகும். இந்த கலவையானது நீர் நிலைகளில் ஒவ்வொரு ஆண்டும் நீர் முழுவதும் நிரம்பி பாசனத்திற்கு பயன்படுத்திய பிறகு நீர் நிலைகளில் அடிப்பரப்பில் சேர்ந்திருக்கும். இந்த வண்டல் மண்ணை பருவமழைக்கு முன்பு நீர் நிலைகளில் இருந்து சேகரித்து விவசாய வயல்களில் இடும்பொழுது அந்த மண்ணின் நீர் தாங்கும் திறன், காற்றோட்டம் மற்றும் மண்ணில் உள்ள சத்துகள் அதிகரித்து பயிர் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். மேலும் வண்டல் மண் எடுப்பதன் மூலம் நீர் நிலைகளின் நீர் கொள்ளளவு அதிகரிக்கிறது. எனவே விவசாயிகள் கூடுதல் மகசூல் பெறுவதற்கு தங்களது நிலங்களில் வண்டல் மண் இட்டு பயனடையலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story