ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் விவசாயிகள் ஆண்டு முழுவதும் வருமானம் பெறலாம்


ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் விவசாயிகள் ஆண்டு முழுவதும் வருமானம் பெறலாம்
x
தினத்தந்தி 5 July 2023 12:15 AM IST (Updated: 5 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் விவசாயிகள் ஆண்டு முழுவதும் வருமானம் பெறலாம் என்று கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.

ராமநாதபுரம்

ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் விவசாயிகள் ஆண்டு முழுவதும் வருமானம் பெறலாம் என்று கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.

ஆண்டு முழுவதும் வருமானம்

ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர் சாகுபடி முறையில் அதிக உற்பத்திக்கான நுட்பங்களை பயன்படுத்தவும், பண்ணைக்கழிவுகளை மறுசுழற்சி செய்திடவும், காலநிலை மற்றும் சமூக பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு பால் உற்பத்தி, கோழி, தேனீ வளர்ப்பு போன்றவை மூலம் ஆண்டு முழுவதும் நிலையான வருமானம் கிடைக்க வழி செய்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு மானாவாரி பகுதி வளர்ச்சி துணை இயக்கத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணைய அமைப்பு 300 எக்டரில் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் அனைத்து வட்டாரங்களிலும் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு பயனாளியாக இணைக்கப்படுவர். இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் குறைந்தது ஒரு எக்டர் நில உரிமை உடையவராக இருக்க வேண்டும்.

பயன்பெறலாம்

மேலும் சொந்த செலவில் ரூ.60 ஆயிரத்தில் பயிர் செயல்விளக்கத்திடல், மண் புழு உரத்தொட்டி மற்றும் ஒரு கறவை மாடு அல்லது 10 ஆடுகள் மற்றும் பழ மரக்கன்றுகள், தேனீ வளர்ப்பு பெட்டி போன்றவற்றை அமைக்க வேண்டும். இவ்வாறு ஒருங்கிணைந்த பண்ணையத்தினை உருவாக்கிய விவசாயிக்கு மானியமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். எனவே அனைத்து வட்டார விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து அல்லது தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் சிறு குறு மற்றும் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு தமிழக அரசு கூடுதலாக 20 சதவீதம் சிறப்பு மானியமாக எக்டருக்கு ரூ.12 ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ.42 ஆயிரம் வழங்கப்படும். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சிறு குறு விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story