சம்பா பருவத்திற்கு விவசாயிகள் பயிா் காப்பீடு செய்யலாம்


சம்பா பருவத்திற்கு விவசாயிகள் பயிா் காப்பீடு செய்யலாம்
x

சம்பா பருவத்திற்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம் என ரிஷிவந்தியம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு திட்டத்தினை நடைமுறைப்படுத்திட இப்கோ - டோக்கியோ இன்சூரன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே ரிஷிவந்தியம் வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்தில், சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய உள்ள விவசாயிகள் நடப்பு பசலி 1432-ம் பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் பதிவு செய்யும் விவசாயியின் பெயர், நிலப்பரப்பு, சர்வே எண், உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒரு ஏக்கர் சம்பா நெற்பயிருக்கு காப்பீட்டு தொகையாக ரூ.464 செலுத்த வேண்டும். காப்பீடு செய்ய வருகிற நவம்பர் மாதம் 15-ந் தேதி கடைசி நாளாகும்.

பயன்பெறலாம்

நெல் நவரை பருவத்திற்கு காப்பீடு தொகை ரூ.464 ஆகும். காப்பீடு செய்ய கடைசி நாள் வருகிற (அடுத்த ஆண்டு 2023) ஜனவரி மாதம் 31-ந் தேதி.ஆகும். மேலும் உளுந்து பயிருக்கு செலுத்த வேண்டிய காப்பீடு தொகை ஏக்கருக்கு ரூ.266 ஆகும். காப்பீடு செய்ய கடைசி நாள் வருகிற நவம்பர் 15 -ந்தேதி ஆகும். வேர்க்கடலைக்கு ஏக்கருக்கு ரூ. 415 ஆகும். காப்பீடு செய்ய கடை நாள் வருகிற டிசம்பர் 31-ந் தேதி ஆகும். கரும்பு பயிருக்கு ரூ.2,569 காப்பீடு செய்ய வருகிற (அடுத்த ஆண்டு 2023) மார்ச் மாதம் 31-ந்தேதி கடைசிநாளாகும். எனவே

விவசாயிகள் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக காப்பீடு கட்டணம் செலுத்தி பயன்பெறலாம். கடன் பெறும் விவசாயிகளுக்கு அவர்களின் ஒப்புதலுடன் வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story