வடகிழக்கு பருவமழையால் பயிர் சேதம் ஏற்பட்டால் அதிகாரிகளுக்கு விவசாயிகள் தகவல் தெரிவிக்கலாம்
வடகிழக்கு பருவமழையால் பயிர் சேதம் ஏற்பட்டால் அதிகாரிகளுக்கு விவசாயிகள் தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் தற்போது வேளாண்மை பயிர்கள் 40 ஆயிரம் எக்டேர் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் 30 ஆயிரத்து 950 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, சம்பா நெல் நடவு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதுவரை ஆயிரத்து 650 எக்டேரில் சம்பா நடவு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 7 ஆயிரம் எக்டேரில் சம்பா நடவு பணிகளுக்கு தேவையான நாற்றங்கால்கள் தயார் நிலையில் உள்ளன. நெல், மக்காச்சோளம், சோளம், வரகு, பருத்தி, கரும்பு மற்றும் உளுந்து ஆகிய பயிர்கள் இளம்பயிர், தூர் கட்டும் பருவம், பூ பூக்கும் பருவம் என பல்வேறு நிலைகளில் உள்ளன.தற்போது, வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. வடகிழக்கு பருவமழையில் இருந்து விவசாயிகள் பயிர்களை காத்து கொள்ளவும், அது தொடர்பான தொழில்நுட்பங்களை பெற்றுக்கொள்ளவும் பயிர்சேத விவரங்களை உடனடியாக அலுவலருக்கு தெரிவிக்கவும், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆகியவற்றை சேர்த்து மொத்தம் 113 அலுவலர்கள் வடகிழக்கு பருவமழை தொடர்பான கண்காணிப்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். வடகிழக்கு பருவமழையின் காரணமாக பயிர் சேதம் ஏற்பட்டால் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தை 04329-228056 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குனர்களை 9443180884 (அரியலூர்), 9884632588 (செந்துறை), 8072890022 (திருமானூர்), 9750890874 (ஜெயங்கொண்டம்), 9486164271 (ஆண்டிமடம்), 8248928648 (தா.பழூர்) ஆகியோரை செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும், வட்டார அளவில் வேளாண்மை அலுவலர்களை 7502821228 (அரியலூர்), 9884632588 (செந்துறை), 7010178765 (திருமானூர்), 7200233393 (ஜெயங்கொண்டம்), 9626650287 (தா.பழூர்) ஆகியோரை செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.இந்த தகவல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.