அரசு நலத்திட்ட உதவிகளை பெற விவசாயிகள் 'கிரைன்ஸ்' வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்-கலெக்டர் சாந்தி தகவல்


அரசு நலத்திட்ட உதவிகளை பெற விவசாயிகள் கிரைன்ஸ் வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்-கலெக்டர் சாந்தி தகவல்
x
தினத்தந்தி 3 Jun 2023 12:15 AM IST (Updated: 3 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்ட விவசாயிகள் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற கிரைன்ஸ் வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று கலெக்டா சாந்தி தெரிவித்துள்ளார்.

தர்மபுரி

தர்மபுரி:

முன்னுரிமை

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உள்ளிட்ட 13 அரசு துறைகளின் திட்டங்களில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக கிரைன்ஸ் (GRAINS) என்ற வலைதளத்தில் விவசாயிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் அனைத்து பயன்களுக்கும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற முடியும்.

விவசாயிகள் ஒவ்வொரு முறையும் அரசின் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் போது ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. மேலும் விவசாயிகள் விவரங்களை வலைதளத்தில் பதிவு செய்வதால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறமுடியும்.

நேரடி பண பரிமாற்றம்

இதன் மூலம் வரும் காலங்களில் நிதி திட்ட பலன்கள் ஆதார் எண் அடிப்படையில் வங்கி கணக்கிற்கு நேரடி பண பரிமாற்றம் செய்யப்படும். எனவே இந்த திட்டத்தில் விவசாயிகள் இணைந்திட ஆதார் எண், புகைப்படம், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் நில உரிமை ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் பதிவு செய்து கொள்ளலாம்.

இதேபோல் உதவி வேளாண்மை அலுவலர் அல்லது உதவி தோட்டக்கலை அலுவலர்களை அணுகி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story