கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் விவசாயிகள் மாநாட்டில் தீர்மானம்


கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் விவசாயிகள் மாநாட்டில் தீர்மானம்
x

கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என படவேட்டில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என படவேட்டில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநாடு

கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 8-வது மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு வட்டத் தலைவர் காமாட்சிசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் பாலமுருகன் கொடியேற்றினார். உதவி தலைவர் சரவணன் வரவேற்று பேசினார்.

வட்டக் குழு நிர்வாகி வெங்கடேசன், போராட்டத்தின்போது உயிர் நீத்த தியாக விவசாயிகளுக்கு அஞ்சலி தீர்மானம் வாசித்தார். செயலாளர் உதயகுமார் வரவு செலவு அறிக்கைகளை சமர்ப்பித்தார். மாவட்டக்குழு செல்வன், மார்க்சிஸ்டு சிபிஎம் வட்டச் செயலாளர் ரவிதாசன், தமிழக மின் வாரிய ஓய்வு நலசங்கம் வீரமுத்து, மாரிமுத்து ஆகியோர் வாழ்த்தி பேசினர்.தமிழக விவசாயிகள் சங்கம் வேலூர் மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தீர்மானங்கள்

மாநாட்டில் நெல் குவிண்டாலுக்கு ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும், செண்பகத்தோப்பு அணையிலிருந்து பல்வேறு கிராமங்களுக்குள் செல்லும் கால்வாய்களை சீரமைக்க வேண்டும், கரும்பு டன்னுக்கு ரூ.4ஆயிரம் வழங்க வேண்டும், வாழை பதப்படுத்தி வைக்க குளிர் சாதன கிடங்கு அமைக்க வேண்டும், போளூர் வட்டத்தில் தவிடு எண்ணெய் ஆலை அமைக்க வேண்டும், பழங்குடியினரின் வன உரிமைச் சட்டம் அமுல் படுத்தி வீட்டுமனைப்பட்டா வழங்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் வட்டக் குழு பலராமன் நன்றி கூறினார்.


Next Story