சங்கராபுரத்தில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
சங்கராபுரத்தில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் வட்ட வேளாண்மை விரிவாக்க மையத்தில் அட்மா விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் மற்றும் வட்டார தொழில் நுட்ப குழு கூட்டம் நடைபெற்றது. அட்மா குழு தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பராணி, கால்நடை மருத்துவர் தங்கராசு, உதவி வேளாண்மை அலுவலர் பழனிவேல், உதவி தோட்டக்கலை அலுவலர் ரகுநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் மவிசுதா வரவேற்றார். கூட்டத்தில் வேளாண்மை துறை திட்டங்கள், மானிய திட்டங்கள், இயற்கை விவசாயம், பயிர் காப்பீட்டு திட்டம், சொட்டுநீர் பாசனத்தின் பயன்பாடுகள், கலைஞரின் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டம், தோட்டக்கலைத்துறை மானிய திட்டங்கள், காய்கறி சாகுபடி தொழில்நுட்பங்கள், கறவை மாடுகள் மற்றும் வெள்ளாடு வளர்ப்பு, கோமாரி தடுப்பூசி போடுவதன் அவசியம், மாடுகளுக்கு தாது உப்பின் அவசியம் பற்றி எடுத்துக் கூறப்பட்டது. இதில் அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் மேரிஆனந்தி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.